Wednesday, August 3, 2011

குரங்கு சுற்றலா நிறுவனம்


ஒரு குரங்கு தாய் தன் குழந்தையை எந்த அளவிற்கு கண்ணும் கருத்துமாக பாதுகாக்கிறதோ, அதைப் போலவே நாங்களும் உங்களை எந்த ஆபத்திலும் தள்ளிவுடமாட்டோம்!

மேல் விவரங்களுக்கு, மீனாவை 98573631 என்ற எண்ணின் மூலம் தொடர்புகொள்ளலாம் :)

ஏன் எங்கள் நிறுவனம்?




அதிர்ஷ்ட தேவி ஒரு முறை தான் கதவைத் தட்டும்! இந்த அரிய வாய்ப்பை ஒரு போதும் தவறவிட்டுவிடாதீர்கள். இந்த தாஜ் மஹால் சுற்றுலாவில் கலந்துகொள்ளும் முதல் நூறு ஆட்களுக்கு அதிர்ஷ்ட குழுக்கிலும் பகிர்ந்துகொள்ள ஒரு சிறந்த வாய்ப்பு கிடைக்கும்! பல பரிசுகளை வீட்டுக்கு எடுத்து செல்ல இன்றே எங்கள் நிறுவனத்திற்கு வந்து இந்த சுற்றுலாவில் சேருங்கள்! நாங்கள் இதைப் போல பல சுற்றுலாவிற்கு சிறுவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அழைத்து சென்று இருக்கிறோம். அனைவரும் எங்களுக்கு நல்ல கருத்துக்களே கொடுத்துயிருக்கிறார்கள்! இன்றே மகிழ வாருங்கள்!


நீங்களே இதன் அழகைப் பாருங்கள்!

http://www.youtube.com/watch?v=6uNehAhvi1I&feature=related

இது என்ன அதிசயம்!


தாஜ் மஹாலைத் தன் பிரியமான மனைவிக்காகக் கட்டியெழுப்பச் சொன்ன மன்னன் ஷாஜகான் அதே சமயம் தன்னைக் குறிக்கும் வகையிலும் தாஜ்மஹாலைப் போன்ற தோற்றம் கொண்ட கறுப்பு நிறத் தாஜ் மஹாலைக் கட்டியெழுப்பியுள்ளதாகவிருந்த சந்தேகத்தின்படி ஆராய்ச்சியாளர்கள் அத்தாஜ்மஹால் இருந்த இடத்தின் சான்றுகளை ஆராய்ந்துள்ளனர்.அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சியின் பின்னர் தாஜ்மகால் கட்டப்பெற்ற சில தூரங்களில் கறுப்பு நிறத் தாஜ் மஹாலைப் போன்ற தோற்றம் அங்கு காணப்படவில்லை ஆனால் அதன் அமைப்புகள்,கற்கள் போன்றனவற்றையும் கண்டெடுத்துச் சான்றுகளைப் பார்த்தனர் அவ்வாறு கறுப்பு நிறத் தாஜ் மஹால் கட்டப்படவில்லை எனவும் இன்று விளக்குகின்றனர்.ஆனால் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட ஒரு குளம் ஒன்றின் மீது மாலை நேரங்களில் தாஜ் மகாலின் தோற்றமானது கறுப்பு நிற வடிவில் தெரிவதும் குறிப்பிடத்தக்கது.அதாவது ஷாஜகான் கவலையில் ஆழும் பொழுது கறுப்பு நிறத் தோளாடை போர்த்தப்பெற்ற இக்குளத்திலிருந்து பிரியமான மனைவி மும்தாஜ் மஹாலுக்குக் கட்டியெழுப்பிய தாஜ்மகாலைப் பார்த்து வந்தார் என்பதும் தாஜ்மகாலின் நிழல் அக்குளத்தில் விழும்பொழுது கறுப்பு நிறமாகத் தோன்றுவதும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும்.

என் பேரழகியே! என் இனிய பொன் மானே!

முகலாயப் பேரரசின் உயர்நிலையில் அப்பேரரசை ஆண்ட ஷா ஜகானின் மூன்றாம் மனைவி மும்தாஸ், அவர்களது 14 ஆவது பிள்ளையான குகாரா பேகம் பிறந்தபோது இறந்துவிட்டாள். பெருந் துயரம் அடைந்த மன்னன் அவளது நினைவாக இந்தக் கட்டிடத்தைக் கட்டத் தொடங்கியதாகவே அவனது வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன. மும்தாஸ் இறந்த அதே ஆண்டிலேயே தாஜ்மகாலின் கட்டிட வேலைகள் தொடங்கின. முதன்மைக் கட்டிடம் 1648 இல் கட்டி முடிக்கப்பட்டது. சூழவுள்ள கட்டிடங்கள், பூங்கா ஆகியவற்றின் கட்டிட வேலைகள் ஐந்து ஆண்டுகள் கழித்தே நிறைவேறின. பேரரசன் ஷா ஜகானே இக் கட்டிடத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறியதாகச் சொல்லப்படுகிறது:

Sunday, July 31, 2011


தாஜ் மகால் (Taj Mahal, தாஜ் மஹால்), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் மகால் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.



ஏங்க தாஜ் மஹாலுக்கு எப்படி போரது?

டெல்லியிலிருந்து தாஜ் மஹால் இருக்கும் ஆக்கராவிற்கு 200 km
தொலைவுதான். டெல்லிக்கு கிங்கையிலிருந்து விமானம் எடுத்து , அங்கிருந்து ரயில் மூலம் ஆக்கரா காண்ட் ரயில் நிலையத்திற்கு சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்து ரயில் நிலையத்திலிருந்து ரிக்‌ஷா எடுத்து செல்லலாம். அல்லது
வாடகை வண்டி ஒன்றை எடுத்து டெல்லியிலிருந்து தாஜ் மஹாலுக்கு செல்லலாம்.